உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா ?
பொதுவாக உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்ற ஆராய்ச்சியில்தான் அனைவரும் இருப்பார்கள். ஆனால், மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் எவ்வாறு உடல் எடையை அதிகப்படுத்துவது என சிந்தித்துக் கொண்டிருப்பர்.
உடல் எடையை குறைப்பதைப் போல அதிகரிப்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல. சில உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த உடல் எடைப் பிரச்சினையை சரி செய்யலாம்.
நட்ஸ் அல்லது நட்ஸ் பட்டர்
கால் கப் பாதாம், 6 கிராம் புரதம், 4 கிராம் ஃபைபர் மற்றும் 15 கிராம் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளடங்கியுள்ளன. இவை உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும்.
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியிலுள்ள அமினோ அமிலம் தசையின் புரதத் தொகுப்பை தூண்டும். இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் உள்ளடங்கியிருக்கும் மாவுச் சத்து அதிக கலோரிகள் கொண்டது. இதை தினமும் உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. இது நமது தசையில் கிளைகோஜனை அதிகரிக்கிறது.
முழு கொழுப்புள்ள தயிர் அல்லது பால்
தயிர் மற்றும் பால் இரண்டும் அதிகமான ஊட்டச்சத்தை வழங்குகின்றன. இதில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவை சமமாக இருக்கும்.
ஸ்மூத்தி
பழங்கள், நட்ஸ் வகைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஸ்மூத்தி வகைகள் நமது உடலில் புரதம், தாதுக்கள், விட்டமின்களுடன் 600 கலோரிகளை வழங்குகின்றன.