நெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள் கீழ்வருமாறு
கண்களுக்கு நல்லது – நெல்லிக்காயில் உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும் திறன் உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் ரெட்டினாவில் உள்ள செல்களை வலுப்படுத்துகிறது. இது உங்களுக்கு கண்புரை நோய் எற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. உங்களின் கண்பார்வைத்திறனை அதிகரிக்கிறது. வயோதிகம் தொடர்பான் பார்வையிழப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
நோய் எதிர்ப்புத்திறன் – நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் உங்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
தொற்றுக்களை எதிர்த்து போராட்டம் – நெல்லிக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டீர்கள் என்றால் அது உங்கள் உடலில் இயற்கை எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்துகிறது. உங்கள் உடல் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. சளி, இரும்ல், காய்ச்சல், சுவாச தொற்றுகளை எதிர்த்து போராடி, அவை வந்தால் உடனடியாக விரட்டுகிறது.
செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்துக்கள் – நெல்லிக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது செரிமானத்தை எளிதாக்கி, குடல் இயங்குவதை அதிகரிக்கிறது. எனவே நெல்லிக்காயை தொடர்ந்து எடுக்கும்போது, அது உங்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்றவை ஏற்படாமல் காக்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. செரிமான எண்சைம்களை தூண்டுகிறது.
வயோதிகம் – நெல்லிக்காய் சரும செல்கள் மீண்டும் உருவாக உதவுகிறது. இதனால், இளம் வயதிலேயே வயோதிக தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. இது முகச்சுருக்கங்கள் மற்றும் சருமத்தில் வரும் சுருக்கங்கள் ஏற்படாமல் குறைக்கிறது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமத்தை பளபளப்பாக்குகிறது. முகப்பருக்களையும் குணப்படுத்துகிறது.
முடிஉதிர்தலுக்கு இயற்கை தீர்வு – நெல்லிக்காள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடியை வலுப்படுத்துகிறது. தலைமுடி உதிர்வைக் குறைக்கிறது. தலைமுடி நன்றாக அடர்ந்து வளர உதவுகிறது. இது இளநரை ஏற்படாமல் தடுக்கிறது. இது பொடுகை நீக்கி, தலையின் ஆரோக்கியத்தை காக்கிறது.