சபாநாயகர் பதவிக்கு மூன்று பேரின் பெயர் !
வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதிச் சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பதி, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், அடுத்த சில தினங்களில் இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் தெரியவருகிறது.