சஜித் பிரேமதாசவின் சான்றிதழ்களை ஆராய வேண்டும்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று (18) காண்பித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று (18) முன்வைத்து உரையாற்றினார்.
எனவே, ஆளுங்கட்சியினரின் சான்றிதழ்கள் எப்போது முன்வைக்கப்படும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,
“ சான்றிதழ்கள், ஆவணங்கள் எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் காண்பித்திருந்தார். ஆனால் பாராளுமன்ற ஹென்சாட்டுக்கு நேற்று மாலைவரை அனுப்பவில்லை. இன்று காலையும் தேடி பார்த்தேன், அவை கையளிக்கப்படவில்லை.
எனவே, எதிர்க்கட்சி தலைவர் அவற்றை வழங்கிய பின்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு ஆராய்ந்த பிறகு அது பற்றி அறிவிக்கப்படும்.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.