நொறுக்குத் தீனிகள் முடி உதிர்வுக்கு காரணமாகுமா ?

நொறுக்குத் தீனிகள் முடி உதிர்வுக்கு காரணமாகுமா ?

வயது ஏற ஏற உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதும் அதனால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுவதும் இயல்பு தான். ஆனால், தற்சமயம் இளம் வயதிலேயே பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை ஏற்படத் தொடங்கிவிடுகிறது.

அதிலும் 36 வயது முதல் 40 வயது வரையில் உள்ள பெண்களில் 51 சதவீதமானவர்கள் இந்த முடி உதிர்தல் பிரச்சினையை சந்திக்கிறார்கள்.

இதற்கு மிக முக்கிய காரணம், மன அழுத்தம், பதட்டம் போன்றவையே.

வீடு மற்றும் அலுவலகங்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக முடி உதிர்தல் பிரச்சினை அதிகரிக்கிறது.

இதுமட்டுமின்றி இரத்தசோகை, தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லை, ஹோர்மோன் ஏற்ற, இறக்கங்கள்,ஊட்டச் சத்து குறைபாடு, அதிகளவான நொறுக்குத் தீனிகள் உண்ணுதல், புகைப்பழக்கம், மது பழக்கம் ஆகியவையும் முடி உதிர்வுக்கான காரணங்களுள் ஒன்று.

முடி உதிர்வை தடுக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் யோகா, இசை போன்றவை உதவும்.

நமது வாழ்க்கை முறையை மாற்றியமைத்தாலே முடி உதிர்வு பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )