முகம் பொலிவிழந்து இருக்கா ?
ஒவ்வொருவருக்குமே தாங்கள் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுப்பதை விட இயற்கை பொருட்களால் பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீண்ட காலம் இளமையாகவும் இருக்கும்.
இன்று நாம் முட்டையை வைத்து எப்படி இளமையாக ஜொலிக்கலாம் என்று பார்க்கலாம்.
முகக் கருமை நீங்க
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
பின் சருமத்தை உலர்த்திவிட்டு, மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதும் முகம் அழகில் ஜொலிக்கும்.