மூட்டுக்களை முடக்கிப்போடும் வாதநோய்க்கு தீர்வு தரும் முடக்கறுத்தான் கீரை
சத்துமிக்க உணவுகள் உண்டாலே நோய்கள் அனைத்தும் பறந்துபோய்விடும்.
அந்த வகையில் மூட்டுக்களை முடக்கிப்போடும் வாதநோயை அகற்றுவதற்கான கீரைதான் முடக்கறுத்தான்.
இந்த முடக்கறுத்தான் கீரை மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்றவற்றுக்கும் நன்மையளிக்கும்.
அந்த வகையில் முடக்கறுத்தான் கீரைக் குழம்பு எவ்வாறு செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- முடக்கறுத்தான் இலை – 100 கிராம்
- மஞ்சள் தூள் – அரை கரண்டி
- தனியா தூள் – ஒரு கரண்டி
- சாம்பார் பொடி – இரண்டு கரண்டி
- கடுகு – சிறிதளவு
- வெங்காயம் (சிறிதாக வெட்டியது) – 2
- தக்காளி – 2
- வெந்தயம் – கால் கரண்டி
- புளி – எலுமிச்சம்பழ அளவு
- நல்லெண்ணெய் – இரண்டு கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முடக்கறுத்தான் இலைகளை போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனை ஆறவைத்து அரைக்க வேண்டும்.
அதே பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஆகியவற்றைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
தொடர்ந்து புளியைக் கரைத்து ஊற்றி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, தனியாத் தூளை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவேண்டும்.
அத்துடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள முடக்கறுத்தான் கீரை கலவையை போட்டு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இதனை சாதம் மற்றும் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.