எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு
நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் பேராசிரியர் பிரியமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வயல்கள் மற்றும் நீர்த் தேங்கி நிற்கும் இடங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் எலிகள் அதிகளவில் நடமாடும் இடங்களில் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வைத்திய நிபுணர் பேராசிரியர் பிரியமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka
TAGS எலிக்காய்ச்சல்