கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது

கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

34 வயதுடைய யப்பாம மேற்பிரிவு கீனாகொட லுணுகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை யப்பாம மேற்பிரிவில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டதாகவும் இதன்போது வீட்டுக்கு பின்புறமாக உள்ள சிறிய காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் 2 பரல்களில் ஊற வைக்கப்பட்டிருந்த 365000 மில்லி லீற்றர் கோடாவையும் 2 பரல்களையும் கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சில தோட்ட பகுதிகளில் பாரிய அளவில் சிலர் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுவதால் சில குடும்பங்களில் உள்ளவர்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் பாடசாலை மாணவர்கள் இரவு நேரங்களில் தனது வீடுகளில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் போது பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி கசிப்பினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )