லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு !

லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு !

லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் நேற்று (28) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறுமி, தாய் மற்றும் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த லொறியொன்று புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )