ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டும்  – பிரமித பண்டார தென்னகோன்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டும் – பிரமித பண்டார தென்னகோன்

ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று (12) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தா்ர.

தொடர்ந்து உரையாற்றிய பிரமித பண்டார தென்னகோன்,

”ரணில் விக்ரமசிங்க மிகவும் குழப்பமான, மிகவும் கடினமான மற்றும் நெருக்கடியான நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சவாலை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர இலங்கையில், நாட்டை பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றவர்கள் யாரும் இல்லை.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முன்னரே அவரது வீடு எரிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகம் கையகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் என்பனவும் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன.

நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்டு, இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்திருந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார்.

நாட்டைக் கைப்பற்றிய பின் படிப்படியாக அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய அவர், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி தேசியப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தினார். ஒடுக்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து மக்களை விடுவிக்கவும் பாடுபட்டார். அவரால் மக்களைக் காப்பாற்ற முடிந்தது.

அதனால், எமது கௌரவமும் மதிப்பும் அவருக்கு உண்டு. ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் ஆணைக்குழு தேர்தலை அறிவித்த பின்னர், எங்கள் வேட்பாளரை முன்னிறுத்துவோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறும் பணிவுடன் அழைக்கின்றோம். இந்த நாடு மிகக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பப்பட்டது போலவே, இந்த நாட்டை முழுமையாக கட்டியெழுப்ப அடுத்த சில வருடங்களுக்கு தேவையான பலத்தையும் தைரியத்தையும் அவருக்கு வழங்க நாமும் எம்மை அர்ப்பணிப்போம்.” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )