வருமானம் மற்றும் செலவுகளை தெரிவிக்காத வேட்பாளர்களுக்கு ஆணைக்குழுவினால் சிவப்பு சமிஞ்ஞை
இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை பொலிஸாரிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”பொதுத்தேர்தலில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பட்டியல் மாவட்ட செயலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது”. என தெரிவித்துள்ளார்.