தெமட்டகொட மேம்பாலத்தின் கீழிருந்து இறந்த சிசுவின் சடலம் மீட்பு
தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணித்த ஒருவர் தெமட்டகொட பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில், குறித்த இடத்திற்கு சென்று பார்த்த போது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது.
மீட்கப்பட்ட சிசு, பொரளை சீமாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், அந்த சிசு ஏற்கனவே இறந்துவிட்டதாக, சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நல்ல உடலமைப்பைக் கொண்ட இந்த குழந்தை ஓரிரு தினங்களுக்கு முன் பிறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
CATEGORIES Sri Lanka