இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது !

இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது !

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இலங்கை அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்கான போட்டி அட்டவணையை நியூசிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் இறுதியில் நியூசிலாந்து செல்லும் இலங்கை அணி டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 02 ஆம் திகதிகளில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் டௌரங்காவில் நடைபெறவுள்ளதுடன், மூன்றாவது போட்டி நெல்சனில் நடைபெறவுள்ளது. 

அதனை தொடர்ந்து ஜனவரி 05ம் திகதி ஒருநாள் தொடர் வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகளும் ஜனவரி 8 மற்றும் 11ம் திகதிகளில் ஹெமில்டன் மற்றும் ஆக்லேண்ட்டில் நடைபெறவுள்ளன. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )