உணவு பொட்டலம் வாங்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலி

உணவு பொட்டலம் வாங்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் அங்கு பட்டினியில் சிக்கி தவிக்கின்றனர்.

இந் நிலையில் அனம்ப்ரா மாகாணம் ஒகிஜா நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அன்னதானத்துக்கு தன்னார்வ அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.

இதனை பெறுவதற்காக ஏராளமானோர் முண்டியடித்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியாகினர்.

இதேபோல் தலைநகர் அபுஜாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

அப்போது பரிசுகளை பெற மக்கள் போட்டிப்போட்டு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிறுவர்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )