Identity திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
டொவினோ தாமஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.எம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஒரு சம்பவத்தை நேரில் பார்த்த திரிஷா அந்த குற்றவாளியை கண்டு பிடிக்க காவல் அதிகாரிக்கு உதவுகிறார். டொவினோ தாமஸ் குற்றவாளிகளின் புகைப்படங்களை வரையும் ஒரு ஆர்டிஸ்டாக உள்ளார். யார் அந்த குற்றவாளி? அதற்கு பின்னணி என்ன? குற்றவாளியை கண்டுப்பிடித்தார்களா? என்பதே படத்தின் மையமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.