இன்றுடன் 20 வருடங்கள் கடந்த கோர சம்பவம்

இன்றுடன் 20 வருடங்கள் கடந்த கோர சம்பவம்

2004 ஆம் ஆண்டு டிச.26-ல் இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக  இலங்கை, இந்தியா,இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளின் கடலோரப்பகுதிகளில் சுனாமிப் பேரலைகள் உருவாகி தாக்கியதில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வு நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றாலும் கூட இன்றளவும் தங்கள் சொந்தங்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் வாடி நிற்கும் உறவுகள் பல.

உலக மக்கள் மனதில் நீங்காத, ஆறாத ஒரு வடுவாகி சென்றுள்ளது இந்த டிசம்பர் 26ம் நாள். அந்த வகையில் இன்று (டிச.26) 21ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, சுனாமியால் இறந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )