மாளிகைக்காடு பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின பிரார்த்தனை
கடந்த 2004 உலகை தாக்கிய சுனாமி பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று (26) காலை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் பள்ளிவாசலின் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடைபெற்றது.
சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் உலமாக்கள், மாளிகைக்காடு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், ஆலோசகர் ஐ. இஸ்திகார் உட்பட நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்
CATEGORIES Sri Lanka