நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறையுமா ?

நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறையுமா ?

உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். இந்த நெய்யானது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இத்தகைய நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதனை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்பதால் தான்.

உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்… ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுபோன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

அதேசமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். செரிமான மண்டலம் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன.

அதில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள்.

இதயத்திற்கு நல்லது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மற்றோரு ஆச்சரியமான நன்மை என்னவென்றால், நெய்யானது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எப்படியெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.

தசைகளுக்கு நல்லது. வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதாவதால் ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மையால் நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.

பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவதிப்படுவார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள் பலருக்கு இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, 1 டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )