போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு பிரஜை கைது
போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காலி பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 4 கிராம் கொக்கெய்ன் மற்றும் 6 கிராம் 12 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணைகளில் சந்தேக நபர் உரிய போதைப்பொருட்களை தபால் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்து இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
CATEGORIES Sri Lanka