ஊர்காவற்துறை படகு திருத்தும் நிலையத்திற்கு அமைச்சர் சந்திரசேகர் கள விஜயம்
யாழ். ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்று (03) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் ஊர்காவற்துறை இறங்கு துறையை பார்வையிட்டதுடன் ஊர்காவற்துறையில் அமைந்துள்ள படகு திருத்தும் நிலையத்தையும் பார்வையிட்டனர்.
அந்த படகு திருத்தும் நிலையமானது கடந்த அரசாங்கத்தினால் 2021ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட நிலையில் செயலிழந்து காணப்படுகிறது.
அதில் இதுவரை ஒரு படகு மட்டுமே ஏற்றப்பட்டு காணப்படுவதாகவும், அந்த படகு திருத்தும் நிலையத்தை இயங்க வைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாவும் அவர்கள் தெரிவித்தனர்.