புதிய வைரஸ் பரவல் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – சீனா!

புதிய வைரஸ் பரவல் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – சீனா!

சீனாவில் தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தற்போது அங்கு நிலவும் குளிர் காலநிலையுடன் இவ்வாறான வைரஸ் தொற்று பரவுவது இயல்பானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பல நாடுகள் சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தங்கள் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன

சீன குடிமக்கள் மற்றும் சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்களின் ஆரோக்கியத்தில் சீன அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

சீனாவிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )