வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைதானார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கானநடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka