பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் குடிப்பவர்களா ?
பிளாஸ்டிக் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் முடியுமானவரை அவற்றை உபயோகிப்பதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
பிளாஸ்டிக்கை தடுக்கும் வண்ணம் பல வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நாம் உண்ணும் உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் பல மூலங்களிலிருந்து நமக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
இந்த மைக்ரோபிளாஸ்டிக் மனிதனின் இதயப் பிரச்சினை, ஹோர்மோன் ஏற்றத்தாழ்வுகள், புற்றுநோய் போன்றவற்றுக்கும் காரணமாக அமைகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பிளாஸ்டிக் போத்தல்களில் நாம் குடிக்கும் தண்ணீர் மூலம் இரத்த ஓட்டத்தில் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதால் இரத்த அழுத்தம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் போத்தல்களிலுள்ள குளிர் பானங்களையும் தவிர்க்க வேண்டும்.