கனடாவில் இனி குடியேற முடியாது?
கனடாவில் குறைந்த வருமானம் பெறும் வேலைகளுக்காக தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தொழிலாளர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகமானோர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருவதால் கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் குடிபெயர்வை மட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறித்து வைக்க கனடா அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.