அதிகளவில் கடன்பெறும் கனேடியர்கள்

அதிகளவில் கடன்பெறும் கனேடியர்கள்

கனேடிய மக்கள் அதிகளவில் கடன் பெறுவதாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கை டெஸ்ஜார்டின்ஸ் (Desjardins) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது

கனேடிய மக்கள் அதிகளவில் கடனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்களில் அதிகமானவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கனடாவில் வங்கி வட்டி வீதம் சிறிதளவு குறைக்கப்பட்டு இருந்தாலும் இது கடன் பிரச்சனைக்கு தீர்வாக அமையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் உலகில் அதிகளவு கடன் பெறுவோரை கொண்ட நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட்டி வீத அதிகரிப்பு காரணமாக கனடியர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செலவுகள் அதிகரிப்பும் கடன் பிரச்சனைக்கான பிரதான காரணங்களில் ஒன்று என தெரிய வருகிறது.

செலவு அதிகரிப்பு மற்றும் வட்டி வீத உயர்வு போன்றவற்றால் கனடியர்களின் சேமிப்பும் சிக்கல்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் வட்டி வீதம் மேலும் குறைக்கப்படும் என பல நிதி நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )