LTTE மீதான தடை நீடிப்பு : கனடா அரசின் தீர்மானத்திற்கு இலங்கை வரவேற்பு

LTTE மீதான தடை நீடிப்பு : கனடா அரசின் தீர்மானத்திற்கு இலங்கை வரவேற்பு

உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தையும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து
கனடா அரசாங்கம் தடையை நீடித்துள்ளமையை இலங்கை அர
சாங்கம் வரவேற்றுள்ளது.

போரின் பின்னர் எஞ்சியுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள்
சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக்
கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது.

புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதி திரட்ட இக்குழுவானது தொடர்ந்தும் துணைபுரிவதாக WTM இன் மீளாய்வு குறிப்பிடுகிறது.

கடுமையான மறுஆய்வு செயல்முறைக்குப்பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்த அமைப்புகளால் தொடர்ந்து அச்சுறுத்தலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

2006 ஏப்ரல் 06 குற்றவியல் சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது .

மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கனடா இதை மறுபரிசீலனை செய்தும் வருகிறது.

இதற்கமைய விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடா அரசாங்கம் மூன்றாவது முறையாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை இந்த ஆண்டு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )