வீட்டில் கண்ணாடிகள் இருப்பதில் என்ன நன்மைகள் உண்டு ?

வீட்டில் கண்ணாடிகள் இருப்பதில் என்ன நன்மைகள் உண்டு ?

ஒரு வீட்டில் கண்டிப்பாக நாலைந்து கண்ணாடிகளாவது இருக்கும். கண்ணாடி என்பது வெறுமனே முகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் கண்ணாடி இருப்பது பல நன்மைகளைத் தரும்.

இயற்கை ஒளி

பொதுவாக கண்ணாடிகள் இயற்கை ஒளியை அறை முழுவதிலும் பிரதிபலிப்பதால் ஆற்றல் பெருகும். வாஸ்துவின் அடிப்படையில், நன்கு ஒளிரும் இடம் நேர்மறை மற்றும் ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும்.

இடத்தை விரிவுபடுத்தல்

கண்ணாடிகள் ஒரு இடத்தில் மாயத் தோற்றத்தை உண்டாக்கும். சிறிய வீடு அல்லது வசதி குறைவாக இருக்கும் அறைகளில் கண்ணாடிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இடத்தை விரிவாக்க கண்ணாடி மிகவும் உதவும் என வாஸ்து கூறுகிறது.

ஆற்றல்

வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை சரி செய்ய கண்ணாடிகள் பயன்படுகின்றன. கண்ணாடிகளை சரியான இடத்தில் வைப்பது தடைகளை நீக்க உதவும்.

செல்வம்

வாஸ்துவின் அடிப்படையில் கண்ணாடிகள் சரியாக வைக்கப்படும்போது செல்வம், செழிப்பு ஆகியவை அதிகரிக்கும்.

மகிழ்ச்சி

உணவு உண்ணும் இடம், ஹோல் போன்ற இடங்களில் கண்ணாடிகள் வைக்கப்படும்போது நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும்.

ஆரோக்கியம்

படுக்கையறைகள், தியான இடங்கள் ஆகியவற்றில் கண்ணாடிகள் வைப்பது புத்துணர்ச்சி மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )