மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சங்கமன் கிராமம் மற்றும் தாண்டியடி கிராம சேவைப் பிரிவுகளுக்கான கிராம மக்களின நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிராமிய நடமாடும் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை (10) சங்கமன் பல்தேவைக்
கட்டடத்தில் காலை 09.30 மணி தொடக்கம் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை
பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

நடமாடும் சேவையில் இலங்ககை மனித உரிமை தொடர்பான சேவைகள் பிரதேச
செயலக பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் தொடர்பான விடயங்கள், பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகள், பிரதேச செயலக காணி மற்றும்
ஆதனம் தொடர்பான விடயங்கள், பிரதேசசெயலக சமூர்த்தி மற்றும் அஸ்வெசும
தொடர்பான பிரச்சினைகள்.பெண்கள், சிறுவர் தொடர்பான பிரச்சினைகள், சமூக
சேவைகள் திணைக்களத்தினுடைய சேவைகள், சட்ட உதவி, ஆணைக்
குழுவின் சட்ட ஆலோசனைக ள் ,பிராந்திய சுகாதார சேவைகள் தொடர்பான சேவைகள், பெண்கள், சிறுவர்கள் தொடர்பான பொலிஸ் சேவைகள் வலயக்
கல்வி அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தின் 0672229728 எனும் தொலைபேசியினுாடாக மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )