மட்டன் கோலா உருண்டை எப்படி செய்வது ?
அசைவ உணவில் ராஜா என்றால் மட்டன் தான். மட்டனில் குழம்பு, வறுவல், சூப், பிரட்டல் உள்ளிட்டவற்றை சாப்பிட்டிருப்போம். ஆனால் மட்டன் கோலா உருண்டை செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா?
மட்டன் கோலா உருண்டை எப்படி செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் – ஒரு கிலோ
- பச்சை மிளகாய் (சிறிதாக வெட்டியது) – 10 கிராம்
- வெள்ளைப்பூண்டு – 20 கிராம்
- கொத்தமல்லி (வெட்டியது) – 30 கிராம்
- மிளகாய் தூள் – 12 கிராம்
- மஞ்சள் தூள் – 4 கிராம்
- எலுமிச்சைச் சாறு – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
அரைப்பதற்கு
- தேங்காய் (துருவியது) – 25 கிராம்
- உளுந்து (வறுத்தது) – 15 கிராம்
- இலவங்கப்பட்டை – 2 கிராம்
- கிராம்பு, கசகசா – 10 கிராம்
செய்முறை
ஆட்டிறைச்சியை நன்றாகக் கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், நறுக்கிய வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு கலவையாக கலந்து வைக்கவும்.
பின், தேங்காய் துருவல், உளுந்து, இலவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, உளுந்து ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும்.
இக் கலவையை அரைத்து வைத்துள்ள இறைச்சியுடன் சேர்த்து கலக்கவும்.
இறுதியாக அக் கலவையை உருண்டை பிடித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.