தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் சம்பளம் கட்சியின் நிதியத்துக்கே!
புதிய பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் சம்பளத்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை குறித்த
உறுப்பினர்கள் தமது சம்பளத்தை கட்சியின் நிதியத்துக்கே வழங்கவுள்ளதாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு
கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘எமது கட்சி சலுகைகளுக்காக அரசியல் செய்யும் இயக்கம் அல்ல.
ஆளுங் கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி இந்த கொள்கையில் மாற்றம் ஏற்படாது.
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின்
நிதியத்துக்கே தமது சம்பளத்தை வழங்குவர்.
நிதியத்தின் ஊடாகவே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் ‘என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.