அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விலை குறைப்பு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (22) முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ கிராம் 145 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 950.00 ரூபாய், பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ கிராம் 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 250.00 ரூபா, ஒரு கிலோ கடலை (பெரியது) 38 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 450.00 ரூபாய், ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனியின் புதிய விலை 275.00 ரூபாவாகவும் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
CATEGORIES Sri Lanka