ஊதுபத்தி ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

ஊதுபத்தி ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக கோவில்கள், விஷேசங்களில் ஊதுபத்திகள் ஏற்றி வைப்பதை நாம் பார்த்திருப்போம். ஒரு சில வீடுகளிலும் மாலை வேளைகளில் ஊதுபத்திகள் ஏற்றி வைப்பர்.

இவ்வாறு ஊதுபத்திகள் ஏற்றி வைக்க என்ன காரணம் என்று தெரியுமா ?

இந்த ஊதுபத்திகள் கலாசாரம் மற்றும் ஆன்மீகத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன. இவற்றை வீடுகளில் ஏற்றி வைப்பதன் மூலம் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

ஊதுபத்திகள் சுற்றியுள்ள காற்றைச் சுத்தப்படுத்துவதோடு, நல்லதொரு சூழலையும் உருவாக்குகிறது. இது நல்ல மனநிலைக்கு வித்திடுகிறது. அதிலும் காலை நேரத்தில் இதனை ஏற்றி வைக்கும்போது அந்த நாள் முழுவதும் மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.

இரவு நேரங்களில் கூட இதை வீட்டில் ஏற்றிவைத்துவிட்டு உறங்கச் செல்லலாம். இதிலிருந்து வெளிவரும் வாசனை நல்ல உறக்கத்துக்கு வழிவகுக்கும்.

நம் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை அழித்து கெட்ட சக்திகளை அழிக்கிறது. ஊதுபத்தியினால் வீட்டுக்கு வெறும் வாசம் மட்டுமல்ல, பலவிதமான நன்மைகளும் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )