நாவுக்கு இதமான மாம்பழ ஸ்மூத்தி : ஈஸியா செய்யலாம் !
முக்கனிகளில் முதன்மையான மாம்பழத்தை யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் மாம்பழத்தில் ஸ்மூத்தி செய்து உண்டால் எப்படியிருக்கும்?
இனி எப்படி மாம்பழ ஸ்மூத்தி செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மாம்பழம் – 1
- தயிர் – 4 கரண்டி
- தேன் – 2 கரண்டி
- பால் – 1/4 கப்
- சீனி – 3 கரண்டி
- ஏலக்காய் – சிறிதளவு
- பாதாம் – சிறிதளவு (துருவியது)
- முந்திரி – சிறிதளவு (துருவியது)
செய்முறை
முதலில் மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பால் சேர்த்து அரைக்கவும்.
பின் சீனி, தயிர், தேன் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு க்ளாஸில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் ஒரு மணித்தியாலம் வரையில் வைக்கவும்.
அதனை வெளியில் எடுத்து, பாதாம், முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
CATEGORIES Lifestyle