முகம் கழுவாவிட்டால் என்ன நடக்கும் ?
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, முதல் வேலையாக முகத்தை கழுவுகிறோம். இவ்வாறு செய்ய என்ன காரணம் என்றால், இரவு முழுவதும் உறங்கியதன் காரணமாக நமது முகம் மிகவும் சோர்வாகவும் உறக்க கலக்கமாகவும் இருக்கும்.
அதுமட்டுமின்றி முகத்தை சுத்தப்படுத்துவதற்கு மிகவும் முக்கிய காரணம், முகத்தில் தேங்கியிருக்கும் அழுக்கு,எண்ணெ்ய்த் தன்மை போன்றவற்றை நீக்குவதற்காகும்.
மேலும் நாள் முழுவதும் வெளியில் அலைந்து திரிவதால் நமது முகத்தில் பக்டீரியாக்கள், வைரஸ்கள், மாசுக்கள், இறந்த தோல் போன்ற செல்கள் ஆகியவை நமது முகத்தில் அப்படியே தேங்கி போயிருக்கும்.
எனவே முகம் கழுவும்போது இறந்த செல்கள் நீங்கி சருமம் புத்துணர்ச்சியாகும்.
அடிக்கடி முகம் கழுவுறீங்களா?
ஒரு நாளில் பல தடவைகள் முகத்தை கழுவுவதால் சருமத்திலுள்ள வியர்வை சுரப்பி பாதிக்கப்படும். இதன் காரணமாகவே முகத்தில் பருக்கள், எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
சாதாரண சருமம் அல்லது எண்ணெய்த் தன்மைக் கொண்ட சருமத்தைக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் முகத்தைக் கழுவலாம்.
அதேசமயம் முகப்பரு உள்ளவர்கள் 3 முறை முகத்தை கழுவலாம்.
நம் தோலின் தன்மைக்கு ஏற்றவாறு நாம் முகத்தை கழுவும் தடவைகளை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம்.
முகம் கழுவாவிட்டால்?
முகம் கழுவாவிட்டால் மாசுபடுத்திகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் உங்கள் தோலில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஃபைபரை சேதப்படுத்தி வயதாவதற்கு முன்பே சருமத்தை முதிர்ச்சியடைய வைத்துவிடும்.