அடிக்கடி அதிகமாக பசி எடுக்கிறதா ?
சிலருக்கு அடிக்கடி பசி உணர்வு ஏற்படும், இதையடுத்து அதிகமாக சாப்பிடுவார்கள்.
இப்படி தொடர்ச்சியாக இருந்தால் உடல் நலனில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அதிகப்படியான பசி உணர்வுக்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நன்றாக சாப்பிடாவிட்டால் இரவில் விழிக்கும்போதெல்லாம் பசி உணர்வு எட்டிப்பார்க்கும். போதுமான அளவு சாப்பிடாவிட்டால் உடலால் போதுமான அளவு ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது. அதனால் அதிகப்படியான அளவு பசி எடுக்கும்.
அளவுக்கு அதிகமான பசியுணர்வை ஹைப்பர் தைராய்டிசத்துடன் தொடர்ந்து கொண்டுள்ளது.
ஒருவரின் தைராய்டு சுரப்பியில் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் போது, உடலின் செயல்பாடு அதிகரித்து, ஆற்றல் வேகமாக எரிக்கப்படும். உடலின் மெட்டபாலிச அளவு அதிகரிக்கும் போது, பசியுணர்வும் அதிகரிக்கும்.
உடலில் சர்க்கரை அளவில் குறைந்தாலோ அல்லது மிகவும் அதிகமானாலோ அதிக பசி உணர்வு ஏற்படும்.
இப்படி இருக்கும் பட்சத்தில் உடனே உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதியுங்கள்.
இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்களுக்கு, அதை நெருங்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். அதில் அதிகப்படியான பசியுணர்வும் ஒன்று.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகளவு பசி எடுப்பது என்பது சாதாரணமான ஒன்று.
கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்கு பசி எடுத்தால் தான், குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.