எக்லெஸ் சொக்லெட் வோல்நட் ப்ரவுனி
சொக்லெட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சொக்லெட்டில் செய்யப்படும் இனிப்புகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
அந்த வகையில, எக்லெஸ் சொக்லெட் வோல்நட் ப்ரவுனி எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- டார்க் சொக்லெட் – கால் கப்
- பால் – 4 கரண்டி
- கோதுமை மா – 5 கரண்டி
- பட்டர் – 2 கரண்டி
- சொக்கோ சிப்ஸ் – 3 கரண்டி
- வெனிலா எசன்ஸ் – சிறிதளவு
- வோல் நட் – தேவையான அளவு
- சீனி – 3 கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் டார்க் சொக்லெட்டை போட்டு டபுள் பொய்லிங் விதத்தில் உருக வைக்கவும்.
பின் அதில் பட்டர் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
இச் சொக்லெட் கலவையில் பொடித்து வைத்துள்ள சீனி, கோதுமை மா சேர்த்து, அதில் சிறிதளவு பால் சேர்த்து கட்டிகளில்லாமல் மென்மையாக கலக்கவும்.
தொடர்ந்து அதில் வோல் நட், வெனிலா எசன்ஸ், சொக்கோ சிப்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு ஒரு ஸ்டேண்ட் வைத்து 15 நிமிடங்களுக்கு சூடுபடுத்த வேண்டும்.
பின் செய்து வைத்துள்ள ப்ரவுனி கலவையை எடுத்து உள்ளே வைத்து மூடி போட்டு முப்பது நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.
சூப்பரான டேஸ்ட்டியான ப்ரவுனி ரெடி