உதடு வெடிப்பாக உள்ளதா ?
வெயில் காலங்களில் சிலருக்கு குளிர் காலத்தை போலவே உதடுகள் வெடிக்கும்.
வெடிப்பை குணப்படுத்தவும், மீண்டும் வெடிப்பு வராமல் தடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தேங்காய் எண்ணெய்யை எப்படி உதட்டில் பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் உப்பு கலக்கவும். இந்த கலவையை பஞ்சு உருண்டையால் உதடுகளில் தடவவும்.
ஒரு நிமிடம் வட்ட இயக்கத்தில் உங்கள் விரல்களால் உதடுகளை மெதுவாக மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடுகள் மென்மையாக இருப்பதை உணருவீர்கள். அதன் பிறகு உங்கள் உதடுகளை மென்மையான துணியால் துடைக்கவும்.
தேங்காய் எண்ணெய் தரும் நன்மைகள்
1. தட்டையான உதடு பிரச்சனையை நீக்கும்
2. உதடு வெடிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
3. உதடு கருமையை நீங்கச் செய்யுதல்
4. இயற்கையான இளஞ்சிவப்பு உதட்டைப் பெறுவது
5. முகம் போன்று உடலுக்கும் கூட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவு தளர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.
6. தேங்காய் எண்ணெய் அழுக்கு மற்றும் மேக் அப் போன்ற நிலையில் சருமத்தை சுத்தம் செய்ய உதவும்.
7. இரவு நேரத்தில் மேக் அப் கலைக்க கண்களில் சிக்கியிருக்கும் மஸ்காராவை துடைக்க என தேங்காய் எண்ணெய் உதவும்.
8. தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் எளிதாக உறிஞ்சப்படுகின்றன.
இதை பயன்படுத்தும் போது வறண்ட சருமம் மற்றும் செதில்களை சரி செய்யும் ஆற்றல் கொண்டது.