போலியோ தடுப்பூசி வேலைத்திட்டத்தின்இறுதிக் கட்டம் வடக்கு காஸாவில் ஆரம்பம்
இரண்டாம் கட்ட போலியோ தடுப்பூசி வேலைத்திட்டத்தின் இறுதிக் கட்டம் வடக்கு காஸாவில் தொடங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தீவிர இஸ்ரேலிய குண்டுவீச்சுகள், பாரிய இடப்பெயர்வு மற்றும் பிராந்தியத்தில் அணுகல் இல்லாமை போன்ற காரணங்களால் இரண்டாவது கட்ட போலியோ தடுப்பூசிதிட்டம் கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
காசா 25 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் முதல் போலியோ
நோயாளரை கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவு செய்தது.
இஸ்ரேலிய தரைவழித் தாக்குதல் தொடங்கி சுமார் ஒரு
மாதத்திற்குப் பிறகு வடக்கு காஸாவின் நிலைமைகள் தொடர்பில்
பல ஐக்கிய நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள்
கருத்துக்களை முன்வைத்த நிலையில், போலியோ தடுப்பூசி
வேலைத்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.