தேர்தல் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது தொடர்பான அறிவித்தல்

தேர்தல் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது தொடர்பான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதற்காக அதிகபட்சம் 05 பேர் மாத்திரமே வீடுகளுக்குச் செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டன.

எதிர்வரும் 11ஆம்,12ஆம்,13 ஆம் மற்றும் 14ஆம் திகதிகளிலும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம், 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் தங்களது பகுதிகளுக்குப் பொறுப்பான தபால் அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதிதபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )