குடும்ப உறவை பாதிக்கும் மன அழுத்தம்
மன அழுத்தம் என்பது அனைவரையும் உள மற்றும் உடல் ரீதியாக பாதிக்கும் ஒன்றாகும். ஆனால், இதன் அடுத்தகட்டம் உறவுகளுக்கிடையில் ஏற்படும் விரிசல். மன அழுத்தம் என்பது குறிப்பாக கணவன் – மனைவிக்கிடையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கணவன் சந்தோஷமாக பேச வரும்போது மனைவி மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது மனைவி சந்தோஷமாக பேச வரும்போது கணவன் மன அழுத்தத்தில் இருந்தாலோ அது குடும்பத்தில் சலிப்புத் தன்மையை ஏற்படுத்தி பிரிவை உண்டுபண்ணும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றன மன அழுத்தத்திலிருந்து உங்களை விலக்கி வைக்கும்.
அதுமட்டுமின்றி கணவன், மனைவி இருவரில் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது மற்றவர் அவருக்கு துணையாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டும்.
நமது பிரச்சினையில் ஒருவர் துணையாக இருக்கிறார் என்ற உணர்வு நமக்கு வந்துவிட்டாலே மன அழுத்தம் பாதியாக குறைந்துவிடும்.
மேலும் அன்பை வெளிக்காட்டக்கூடிய சிறு சிறு செயல்கள், அன்பளிப்புகள் போன்றவை அவர்களின் மனத் தாக்கத்தை முற்றிலும் மாற்றும்.