கருமையை போக்கும் தக்காளி
முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பல வகையான க்ரீம்களை பயன்படுத்துகிறோம். ஆனால், வீட்டிலிருக்கும் பொருட்களைக்கொண்டே முகத்தை பளபளப்பாக மாற்ற முடியும்.
தக்காளியைக் கொண்டு முகத்தை எவ்வாறு பளபளப்பாக மாற்றலாம் எனப் பார்ப்போம்.
நன்கு பழுத்த தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் பூசி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்திலுள்ள எண்ணெய் பசை, கருமை உள்ளிட்டவை மாறும். இதை ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் நல்லது.
தக்காளியில் இருக்கும் லைகோ பீன் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தை இளமையாகவும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பாகவும் வைக்கும். மேலும் தக்காளியிலுள்ள சாலிசிலிக் அமிலம் முகப்பருக்களை விரட்டும்.
தக்காளி ஜூஸ் 3 கரண்டி, உருளைக்கிழங்கு ஜூஸ் 2 கரண்டி எடுத்து அதில் சிறிதளவு சீனி சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் செய்து வரவேண்டும். இவ்வாறு செய்யும்போது முகத்திலுள்ள அழுக்குகள் நீங்குவதோடு கரும்புள்ளிகளும் மறையும்.