தேர்தல் பாதுகாப்பிற்காக பொலிஸார் தயார்
பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுமார் 64,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 13,314 தொகுதிகளுக்கு 13,383 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.