வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த முதலாவது டெஸ்ட்
சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வியாழக்கிழமை (26) ஆரம்பித்து திங்கட்கிழமை (30) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 586/10 (துடுப்பாட்டம்: ஷோன் வில்லியம்ஸ் 154, பிரயன் பென்னிட் ஆ.இ 110, கிறேய்க் எர்வின் 104, பென் கர்ரன் 68, தகுட்ஸ்வனஷே கைட்டானோ 46 ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்லாஹ் மொஹமட் கஸன்ஃபார் 3/127, ஸியா-உர்-றெஹ்மான் 2/101, நவீட் ஸட்ரான் 2/109, அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 1/66)
ஆப்கானிஸ்தான்: 699/10 (துடுப்பாட்டம்: ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி 246, ரஹ்மத் ஷா 234, அஃப்ஸர் ஸஸாய் 113 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரயன் பென்னிட் 5/95, ஷோன் வில்லியம்ஸ் 2/145, பிளஸிங்க் முஸர்பனி 1/52, நியூமன் நையம்ஹுரி 1/82, ட்ரெவர் குவான்டு 1/142)
சிம்பாப்வே: 142/4 (பென் கர்ரன் 41, ஷோன் வில்லியம்ஸ் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸகிர் கான் 2/43, அல்லாஹ் மொஹமட் கஸன்ஃபார் 1/34)
போட்டியின் நாயகன்: ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி