உடல் சூட்டை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் மண் குளியல்

உடல் சூட்டை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் மண் குளியல்

உலகின் பல நாடுகளிலும் இப்போது இயற்கைக்கு திரும்புவோம் என்ற கொள்கை பிரபலமாகி வருகிறது. அதாவது இயற்கை உணவு, நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது, மண் குளியல், சூரிய குளியல் என்று பல்வேறு இயற்கை வளங்களை சார்ந்த வாழ்வியல் முறைகளை பின்பற்றி வாழ்வது.

இயற்கையில் நீரை பயன்படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறைக்கு லூயி கூனி என்ற ஜெர்மானிய இயற்கை மருத்துவர்கள் அடித்தளமிட்டனர். இவர்களை போல், மண்ணை வைத்து பல நோய்களை குணமாக்க முடியும் என்று மண் சிகிச்சை முறையை அமெரிக்காவில் ஜஸ்ட் என்பவர் அறிமுகம் செய்தார்.

இந்த மண் சிகிச்சை முறையில், உலர்ந்த வண்டல் மண்ணை நன்றாக சுத்தம் செய்து கொள்கிறார்கள். பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மண்ணை சுத்தமான தண்ணீரில் குழம்பாக கரைத்துக் கொண்டு உடம்பு முழுவதும் குறைந்தது ½ சென்டிமீட்டர் கனம் இருக்கும்படி பூசிக் கொள்கிறார்கள்.

இவ்வாறு மண் குளியல் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை விரைவில் வெளியேற்றும். நோயின் தன்மையை அனுசரித்து உணவிலும் கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் மண் குளியல் சிறந்த பயன் தருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மண் குளியல் சிகிச்சை தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )