பிரித்தானிய பாராளுமன்றம் கலைப்பு !
பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் பிரித்தானிய பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக இன்று கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து உரிய காலத்திற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும் பிரித்தானிய பிரதமரின் தீர்மானத்திற்கு கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.