கொலம்பியாவில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி !
கொலம்பியா நாட்டின் தென்மேற்கே உள்ள நெடுஞ்சாலையில், சுற்றுலா பேருந்து ஒன்று வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான தகவலை அறிந்தது, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் 8,000 பேர் பலியாகிவருகின்றனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய இந்த விபத்துகள் தொடர்பில் காரணங்களை கண்டறியும் பணியில் அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.