அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை!

அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை!

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று (31) இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அயர்லாந்து அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )