விண்வெளி உபகரணங்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை !

விண்வெளி உபகரணங்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை !

விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன.

இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )