ரோஹிங்கியர்களை நாடு கடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை
ரோஹிங்கியர்களை நாடு கடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நேற்று (09) பாராளுமன்றில் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
” நாடு கடத்தல் பற்றி கலந்துரையாடப்படவில்லை. வெளிவிவகார அமைச்சர் மியன்மார் அரசுடன் ஆரம்பக்கட்ட கலந்துரையாடலை நடத்தியுள்ளது. தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு உரிய தீர்மானம் எடுக்கப்படும்.” என தெரிவித்தார்.